Friday, September 26, 2008

உன்னிலும் என்னிலும் !
















உலகம்

உயிர்கள் தோன்றிய விதம் பற்றி
ஆய்வு நடத்தி கொண்டிருக்கையில்
என் பார்வையில் உலகம்...
கருவறை மாறியதால் மாறியது பல...
உன்னிலும் என்னிலும்..!

கைப்பிடித்து நீ நடை பழகையில்
நானும் நடை பழகினேன் !
கையேந்தி,
கடைத்தெருவில் !

நீ புசித்து போட்ட எச்சைக்கும்
கூட எனக்கு போட்டியாளன்
என் வயது நண்பன்-
தெரு நாய்!

நீ தாய்ப்பால் பருகையில்,
தண்ணீருக்கே வழியில்லாத
அவளிடம்,
எஞ்சிய
இரத்தமும் எனக்காய்
தாய்ப்பாலானது!

பிரவசத்தில் மட்டும்
நான் உன்னை விஞ்சினேன் !
ஆம்!
நான் சுகப்(?)பிரவசமாம் !
நீ சிசெரியனாம்!

***நாய் பூனைக்குப் பாலூட்டியதாம் !
***ஐந்து ரூபாய் தகராறில் அண்ணன்
அடித்துக் கொலை - செய்திகள் .
இதில் யாருக்கு ஐந்தறிவு ?
யாருக்கு ஆறறிவு ?
புரியவில்லை எனக்கு!

நாளைக்கு மூணுவேளை சாப்பிடணும்,
வரைமுறை உனக்கு !
நாளைக்காவது சாப்பிடவேண்டும்
என்று நான்!

எனக்கொன்றும் நான்
நீயாக வேண்டும்
என்றில்லை !
குறைந்தபட்சம் இத்தகைய
செய்திகளை கேள்விப்படாமல்
இருந்தாலே போதும்!

உலகப் பணக்காரனுக்கே
நாளைய நிலை எண்ணி
தினம் தினம் கலக்கம்!
உள்ளத்தால் பணக்காரனாய்
உணர்கிறேன் நான்!

கந்தையானாலும்
கசக்கிக்கட்டு !
கந்தையே இல்லையெனில் ?

கால் வயிற்று கஞ்சிக்கு
கால் தொட்டு தொழுகிறேன் !
கண நேரத்தில் உடல் முழுதும்
சேற்றை இறைத்தாய் உன் காரில்!

`அனைவருக்கும் கட்டாய கல்வி '
என்பதெல்லாம் அரசியல்
எந்த பள்ளியில் அனுமதிக்கிறார்கள்
என் போன்றவனை?

அத்தனையும் அதிகமாய்
கிடைக்கபெற்ற உங்களுக்குள்ளே இவ்வளவு
போட்டியும் பொறாமையும் !
எதுவுமே இல்லாமல் படைக்கப்பட்ட
என்னையும் உன்னுடன் கலந்தது
எந்த விதத்தில் நியாயம் ?

விடை தெரியாத வினாக்களாகவே
அமைந்தன அத்தனையும்!

நீ
கேட்பது சரிதான்!
சமுதாயத்தில்
காலங்காலமாய் புறக்கணிக்கப்பட்ட
எனக்கு இத்தனை கேள்விகள்
எழக்கூடாது !
எத்தனை என் போன்றவனை
பரிவு காட்டியது இந்த சமுதாயம் ?
என் மனம் நீ அறிந்து கொள்ள ....

எதுவாயினும்
பிறப்பிடம் தவிர்த்து
பிறப்பால் நானும் உன்னில் ஒருவன் தானே ?

அன்புடன்....
மாரிமுத்து.
9790123346

நன்றி!!!

10 comments:

அன்பே சிவம்... said...

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது...
இப்படி ஒரு சிறந்த புரட்சிக் கவிஞன் எனது உயிர் தோழனாக....!!!
மேலும் படைப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்புடன்...

----உன் அறை சகவாசி....

Zappy said...

அருமை நண்பா!!!

உன்னுடைய மேன்மையான சிந்தனையில் மேலும் பல கவிதைகள் புனைவதற்கு எனது வாழ்த்துக்கள்!!

Fan of ..laajee.., said...

Wow, Anna, really touching words.., i need like your great peoples.., be touch with me,

Unknown said...

Marimuthu, it's touchs my heart very much

Unknown said...

கவிதைக்கு பொய் அழகு எனும் கூற்றை பொய் ஆக்கிவிட்டாய் மகாயா
அந்த சிறுவனாக உண்மையாக மாறிவிட்டாய் !
அந்த சிறுவனின் விழிகளில் தெரியும் வலிகளை உன் கவிதை வரிகளால் வெளியே கொண்டு வந்துவிட்டாய், உன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
- செய்யது இஸ்ஸதீன்

Jeyakumar Ananthappan said...

மாரிமுத்து சிலிர்த்தது என் உடம்பு மட்டும் அல்ல என் மனசும்தான்!!!

Jeyakumar Ananthappan said...

உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய விஷயம் அல்ல வாழ்ந்து காட்ட வேண்டிய விஷயம்...

Unknown said...

வாழ்த்துக்கள்!!!!

படைத்ததற்கு அல்ல...

இன்னும் படைப்பதற்கு.......


எதிர்பார்ப்புடன்
jram..

Rajthilak said...

சூப்பர். நல்லா இருக்குன்னு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Naveen said...

இதை படிக்கும் நேரத்தில் என் கண்களில் நீர் மல்கியது. அனுபவித்து படித்தேன். வெகு சிறப்பான கவிதை!!