Sunday, October 5, 2008

ஊதாரியின் தாய்!

அதிகாலைப் பொழுது முதல்
அந்திசாயும் மாலை வரை
ஒவ்வொரு நொடியும்
உன்னடி பிடித்திடுவாள்!
உதறியபடி நீ
ஊதாரியாய் திரிந்திடுவாய்..

தன்வயிறு
காயினும்,
உன்வயிறு
நிறைத்திடுவாள்!

குற்றவாளி நீ
எனினும்,
உன் முகம்
காட்ட மாட்டாள்!

தலைவலி
கொடுப்பினும்,
இலையிட்டு
உணவளிப்பாள்!

கொலைப்பழி
விழினும்,
வழிசென்று
அழைத்திடுவாள்!

நீ குருதி காண்கிறாய்
ஒரு கொலையில்!
அவள்
உனக்குப் போய்
குருதியையே
உணவாக்கியவள்!

ஆம்!
தாய்மையில்
வேற்றுமையில்லை,
வேற்றுமை......
உன்னிலும் என்னிலும் தான்!!

3 comments:

தெய்வேந்திரன் said...

ஆம். தாய்மையில் என்றுமே வேற்றுமைகள் என்ற ஒன்று இருந்ததே இல்லை.. (சமீபத்தில் வெளிவந்து வெற்றி கண்ட சுப்ரமணியபுரத்தில் கூட இதனை காமித்து இருக்கிறார்கள்..)

அழகான கவிதை மாரிமுத்து...

Rajthilak said...

மிகவும் அருமை.

நீ சொன்ன எல்லாமே உண்மைதான்.

தாய்மைக்கு ஈடு இந்த உலகில் எதுவும் இல்லை.

Naveen said...

உள்ளங்கை நெல்லிக்கனி போல உண்மையை எழுதி இருக்கிறாய். பெத்த மனம் என்றும் பித்து தான்! பிள்ளை மனம் கல்லுதான்!! இந்த நிலை மாறவேண்டும்..